இந்திய கிரிக்கெட் அணியின்
பயிற்சியாளராக உள்ள டங்கன் பிளட்சரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில்,
புதிய பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமிக்கப்படுவார் என தகவல்கள்
வெளியாகியுள்ளன.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்
இது தொடர்பாக சவுரவ் கங்குலிக்கும், பி.சி.சி.ஐ. தலைவராக உள்ள ஜக்மோகன்
டால்மியாவுக்கும் இடையே அதிகார்பூர்வமற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைதொடர்ந்து ஜக்மோகன் டால்மியா, கங்குலியை
பயிற்சியாளராக நியமிக்க ஆர்வம் கட்டுவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும்
இது தொடர்பாக அந்த ஒரு உறுதியையும் ஜக்மோகன் டால்மியா அளிக்கவில்லை.
இதனிடையே,
ராகுல் டிராவிட் பெயரும் பயற்சியாளர் பதவிக்கு அடிபடுகிறது. இருப்பினும்
வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி பிசிசிஐயின் செயற்குழு கூட்டத்தில் பயிற்சியாளர்
பற்றி விவாதிக்கப்படவுள்ளது. அதன் பின்னரே உறுதியான தகவல் வெளியாகும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment